ஆராதனை நாயகன் | aaraathanai naayakan

Tamil Christian Song

பல்லவி ஆராதனை நாயகன் நீரே ஆராதனை வேந்தனும் நீரே ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் சரணங்கள் 1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர் ஆண்டவர் இயேசுவிலே விடிவெள்ளியே என்தன் பிரியம் நீரே என்றென்றும் தொழுதிடுவேன் --- ஆராதனை 2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம் மகிமையின் தேவன் நீரே முழங்கால் யாவுமே முடங்கிடுமே மகிழ்வுடன் துதித்திடவே --- ஆராதனை 3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள திரும்பவும் வருவேன் என்றீர் ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே அனுதினம் வணங்கிடுவேன் -- ஆராதனை --aaraathanai naayakan neerae--
Tamil