அநாதி ஸ்நேகம் | anaathi snaekam

Tamil Christian Song

அநாதி ஸ்நேகம் - (3) எங்கள் இயேசுவின் ஸ்நேகம் பரத்தை விட்டு இறங்கி வந்த ஸ்நேகம் பரலோக மகிமை துறந்து வந்த ஸ்நேகம் எல்லா ஸ்நேகத்திலும் மகா மேலான ஸ்நேகம் - (2) 1. மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த ஸ்நேகம் காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல் ஸ்நேகிதனே என்றழத்தை ஸ்நேகம் அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் --- அநாதி 2. கண் இழந்த பெலன் இழந்த சிம்சோனையும் நினைத்த ஸ்நேகம் நினிவேக்குப் போகாமல் திசை மாறி ஓடிய யோனாவைப் பயன்படுத்திய ஸ்நேகம் அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் --- அநாதி --anaathi snaekam--
Tamil