சரணங்கள் | antho siluvaip pavani

Tamil Christian Song

சரணங்கள் 1. அந்தோ சிலுவைப் பவனி பார் – நமது ஆண்டவர் படுந்துயர் ஆறுமோ – நாம் அழுதாலுந்தான் தீருமோ – குரு சன்றி மீட்பு ஒப்பேறுமா – சகி சகி 2. தோளில் பாரம் அழுந்தவே – அவர் தேய்ந்து கீழே விழுகிறார் – ஐயோ தூக்கிவிடுவார் இல்லையோ – மா தோஷி என்னால் இத்தொல்லையோ – சகி சகி 3. தூக்கென்றவரை அதட்டுறான் – ஒரு தோஷி முறுக்கிப் பிதற்றுறான் – அங்கே துடுக்காய் சவுக்கை சுழற்றுறான் – ஒருவன் தொந்தரை செய்தே அலட்டுறான் – சகி சகி 4. மெல்ல இயேசு நடக்கிறார் – வேர்த்து மெய் சோர்ந் துடைந்து சடைக்கிறார் – தம்மைப் பலியாய் விருப்புடன் படைக்கிறார் – எந்தன் பாவக் கடன்களை அடைக்கிறார் – சகி சகி 5. மாதா ஏங்கித் தேம்புறாள் – நன
Tamil
1 views