அடைக்கலம் | ataikkalam ataikkalamae

Tamil Christian Song

அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன் அடைக்கலம் அடைக்கலமே! அனுபல்லவி திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம் சரணங்கள் 1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே, அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே; மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! —அடைக்கலம் 2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்; கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே, கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! — அடைக்கலம் 3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும் நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்; பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தின
Tamil