அதி-மங்கல | athi mangala

Tamil Christian Song

அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர் வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த வண்மையே தாரணனே! 1. மதி-மங்கின எங்களுக்கும், திதி-சிங்கினர் தங்களுக்கும் உனின் மாட்சியும் திவ்விய காட்சியும் தோன்றிடவையாய் துங்கவனே – அதி-மங்கல 2. முடி-மன்னர்கள் மேடையும், மிகு-உன்னத வீடதையும் நீங்கி மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ, வந்தனையோ தரையில்? – அதி-மங்கல 3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும், உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப் பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும் பெற்ற நற்கோலம் இதோ? – அதி-மங்கல --athi mangala kaarananae--
Tamil