அதிகாலையில் | Athikalayil Um Thirumugam

Tamil Christian Song

அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்கு தந்தேன் – அன்பு நேசரே ஆராதனை ஆராதனை – 2 அன்பர் இயேசு இராஜனுக்கு ஆவியான தேவனுக்கு 1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரப்பவேண்டும் – 2 என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் – 2 -ஆராதனை 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத் துடிப்பாக மாற்றும் – 2 என் ஜீவ நாட்கள் எல்லாம் ஜெபவீரன் என்று எழுதும் – 2 -ஆராதனை 3. சுவிசேஷ பாரம் ஒன்றே என் சுமையாக மாற வேண்டும் – 2 என் தேச எல்லையெங்கும் உம் நாமம் சொல்லவேண்டும் – 2 -ஆராதனை 4. உமக்குகந்த தூய பலியாய் இந்த உடலை ஒப்புக்கொடுத
Tamil