இந்தியன் என்று | Indian Endru Solvom

Tamil Christian Song

இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்துக் கொள்வோம்! (2) எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம் (3) - இந்தியன் (2) நம் மொழிகள் வேறாயினும் நம் ஒரு தாய் மக்களே நம் நிறங்கள் வேறாயினும் நம்மில் வேற்றுமையில்லையே - (2) எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம் (3) - இந்தியன் (2) யுத்தங்கள் மாறணும் சமாதானம் பிறக்கணும் ஜாதி வேற்றுமை இல்லாமல் - நாம் ஒன்றாய் வாழணும் - (2) இளைஞர் சமுதாயம் இன்றே எழுந்து நீதியை நாட்டணும் நம் தேசத்தை உயர்த்தணும் - ஓ... எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம் (3) --Indian Endru Solvom--
Tamil