இடைவிடா சகாயமாதா | itaividaa sakaayamaathaa

Tamil Christian Song

இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள் நிதம் துணை சேர்ப்பாயே – 2 ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் – அன்னை தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் – 2 மாறாத கொடுமை நீங்காத வறுமை தானாக என்றுமே மாற்றிடுவாள் – 2 கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி உள்ளம் திறந்து சொல் உன் கதையை – 2 வெள்ளம் போல அருள் கருணை பாய்ந்திட தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் – 2 --itaividaa sakaayamaathaa innaiyillaa thaevamaathaa --
Tamil