இதய காணிக்கை | ithaya kaannikkai iravaatha

Tamil Christian Song

இதய காணிக்கை இறவாத காணிக்கை இறை மனித உறவின் சின்னமாம் அன்பின் காணிக்கை -2 இறையே இதை ஏற்றிடுவாய் உனதாய் எனை மாற்றிடுவாய் -2 மேகங்கள் கூடிடவே வான்மழை அருவியாகுமே உன் அருளுக்குச் சான்றாகுமே -2 இறைவா உனைப்போல் வார்த்தையை வாழ்வாக்கி வழிகாட்டிச் சென்றிட வரம் ஒன்று தா -2 —இதய காணிக்கை எண்ணங்கள் உயர்ந்திடவே உள்ளங்கள் கோயிலாகுமே நல்வாழ்வு அதன் பரிசாகுமே -2 கருணா உனைப்போல் மாறாத அன்பினால் அயலாரை நேசிக்கும் நல் உள்ளம் தா -2 —இதய காணிக்கை --ithaya kaannikkai iravaatha kaannikkai --
Tamil