உனக்காய் மரித்தேன் | unakkaay mariththaen

Tamil Christian Song

உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம் உயிரோடெழுந்தேன் இதோ ஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரி துதியே கனமே மகிமை செலுத்து(2) என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசு சொல் தவறாதவரே சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே --- சீயோனே 2. அன்றாடகம் என்னுடன் - பேசி அன்பாய் விசாரிக்கின்றார் என்னோடு ஜீவிக்க இயேசு உயிர்த்தாரே --- சீயோனே 3. சுத்த திருச்சபையே பறை சாற்றிடு நற்செய்தியை சாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் --- சீயோனே 3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவ நல்ல மார்க்கமிதுவே நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம் --- சீயோனே
Tamil
1 views